Monday, June 23, 2008

ஈர தீபங்கள்



சில நேரங்களில்
தீபத்தில் பூ வாசம்;
ரோஜாக்களுக்குள்
எரிந்து கொண்டிருக்கிறது
நெருப்பு!

ஆம் ..;
காதல் எதுவும் செய்யும்?

வைரபாரதி

Wednesday, June 11, 2008

கனவுகள் மெய்ப்படும்


கனவுகள் மெய்ப்படும்!

நாங்கள்
கனவுகளுக்கு
சிறகு கட்டி விடுவோம்!

நீங்கள் உயர்வதற்கு
வழிகள்
சொல்லி தருவோம்!

உங்கள் பாதைகள் நெடுக
பூக்கள்
தூவி விடுவோம்!

சில முட்கள் இருந்தால்
அதை மீறி
பயணம் தொடர்வோம்!

உங்கள் தேவை அறிந்து
வாழ்வை
மீட்டு தருவோம்!

உங்கள் உயர்வில் மகிழ்ந்து
அதையே பரிசாய்
பெறுவோம்!

எந்த கதவையும்
திறந்துவிடும்; உற்சாகம் எனும்
சாவிகள் தருவோம்!

முன்னேற்றம் எனும்
தீபத்தை- உங்கள்
மனதில் ஏற்றி விடுவோம்!

சுவாசம் போல
உங்களுடன்
நாங்கள் கூட வருவோம்!

சிகரம் போல
எண்ணங்களை
நாங்கள் உயர்த்தி விடுவோம்!

பூமி என்றும் தேய்வதில்லை!
காற்று என்றும் ஓய்வதில்லை!
வாழ்க்கை எங்கும் போவதில்லை!
கண்ணீர் இனியும் தேவையில்லை!

இல்லை என்பது இனியும் இல்லை!
எல்லை என்பது எதற்கும் இல்லை!
விடியல் என்பது இருட்டவில்லை
வெற்றிகள் என்பது முடிவதில்லை!


வாழ்த்துடன் வைரபாரதி

Thanks
VairaBharathi (Ganesh.M)